மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


மருத நில வளப்பம் - வலைஞர் இயல்பு

பாடல் வரிகள்:- 238 - 258

அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் . . . .[240]

கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது

பொருளுரை:

புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர். அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன. அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும், உயர்ந்த மலைப் பரப்பிலும் மழையைக் கொட்டின. அதனால் கவலை என்னும் மலைப்பிளவுப் பகுதிகளில் அருவி ஓடி ஒலித்தது. மழை மிகுதியால் மூங்கில் காடுகளில் மேய்ந்த யானைக்கூட்டம் நடுங்கிற்று. வானத்தில் முழங்கும் இடி மலைமுகடுகளில் மோதி எதிரொலித்தது.

குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி . . . .[245]

நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல் . . . .[250]

வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்

பொருளுரை:

கீழைக் கடலுக்குச் செல்லும் செந்தண்ணீர் வெள்ளத்தைத் தடுத்துக் குளங்களில் பாயச் செய்தனர். அதனால் விளைந்த கதிர்மணிகளை யானை தின்று மாய்ப்பதைப் பற்றி உழவர் பொருட்படுத்தாத அளவுக்கு விளைச்சல் பெருகிற்று. குளத்திலிருந்து பாயும் நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது இலஞ்சி. இலஞ்சிகளில் தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் முதலான பூக்கள் வண்டுகள் மொய்க்கப் பூத்து மணம் பரப்பின.

கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து . . . .[255]

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை