மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்

பாடல் வரிகள்:- 177 - 196

எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையொட . . . .[180]

முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார்ப்பப் . . . .[185]

பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி . . . .[190]

பொருளுரை:

செழியன் முதுபொழிலை முற்றுகையிட்டான். (அம் முற்றுகையின் போது எப்படித் தாக்கினான் என்பது இங்குக் கூறப்படுகிறது) முரசை முழக்கினான். யானைப்படையைப் பரவலாக நிறுத்தினான். கடல் போன்ற காலாள் படையுடன் சென்று தாக்கினான். முருகனைப் போல் மோதினான். போர் முழக்கம் வானில் எதிரொலித்தது. வெயிலின் கதிர்கள் போல் அம்புகள் பாய்ந்தன. போர்க்குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தன. சங்கு ஊதினர். கொம்பு ஊதினர். பகையரசரின் பெருமை அழிந்தது. நாடு அழிந்து போனதால் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். பகை நாட்டு மக்களின் சுற்றத்தார்கூட அழிந்து போயினர். எதிர்த்துப் போரிட்ட பகைவர் செழியனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். இவ்வாறு முதுபொழில் முற்றுகை நடந்து முடிந்தது.

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் . . . .[195]

தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம் . . . .[177 - 196]

பொருளுரை:

வழிவழி சிறக்க வாழ்க. அரசியல் பிழையாது ஆட்சி புரிக. அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்து காட்டிய பெரியோரின் அடியொற்றிப் பிழை நேராமல் ஆட்சி புரிக. மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.