மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
பாடல் வரிகள்:- 210 - 237
அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் . . . .[215]
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ . . . .[220]
மறங் கலங்கத் தலைச் சென்று
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்
ரழித்தானாக் கொழுந்திற்றி
யிழித்தானாப் பலசொன்றி
யுண்டானாக் கூர்நறவிற்
றின்றானா வினவைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் . . . .[215]
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாண ருவப்பக் களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ . . . .[220]
மறங்கலங்கத் தலைச்சென்று
வாளுழந்ததன் றாள்வாழ்த்தி
நாளீண்டிய நல்லகவர்க்குத்
தேரோடு மாசிதறிச்
பொருளுரை:
வெறுக்கை என்பது ‘போதும் போதும்’ என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம். ஆனா = அமையாத. யாணர் =புதுப்புது வருவாய். குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய். தின்றழிக்க முடியாத புலால் உணவு. அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு. உண்டு மாளாத கள். இவற்றைத் தின்று மாளாத காலைப்பொழுது. பயன்படுத்த முடியாமல் நிலத்திலேயே கொட்டிக் கிடக்கும் வெறுக்கத் தக்க செல்வம். எதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் செல்வ வளம் செழித்துக் கிடக்கும் அரண்மனை. யாழ் மீட்டும் விறலியர் கைகளுக்கு வளையல். பாணர்களுக்கு யானைகள். அதிகாலையில் அவைக்கு வந்து அரசனை வாழ்த்தும் அகவர்களுக்கு குதிரை பூட்டிய தேர். அகவர் = ’ஜே’ போடுவோர் என்றெல்லாம் பரிசுகளை நெடுஞ்செழியன் வழங்கினான். நண்பர்கள் மகிழும்படி வென்று கொண்டுவந்தனவற்றை வழங்கினான்.
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார . . . .[230]
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் . . . .[235]
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே . . . .[210 - 237]
பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார் . . . .[230]
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்
கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த் . . . .[235]
திரையிடு மணலினும் பலரே யுரைசெல
மலர்தலை யுலக மாண்டுகழிந் தோரே
பொருளுரை:
விழுமிய பெரியோர் உன் சுற்றம். அவர்கள் நீ சூட்டிய விருதுப் பூவை அணிந்தவர்கள். அவர்களின் மார்பில் உள்ள சந்தனம் பெருமையால் புலர்ந்துள்ளது. அவர்களும் நீயும் பையில் கொண்டுவந்த கள்ளைக் கலத்தில் வாங்கி உண்டு மகிழ்கிறீர்கள். உன்னைப் பணிந்த அரசர்கள் இப்படிச் சுற்றமாக வாழ்கிறார்கள். உன்னைப் பணியாதவர்களின் பாசறைகளைக் கடந்து நீ வென்றாய். பருந்துகளும் பறக்க முடியாத பாசறைகளில் காலை வேளையில் முரசு முழக்கி வென்றாய். இப்படி உன்னைப் பணிந்தும் பணியாமலும் உலகை ஆண்டு கழிந்த மன்னர் கடற்கரை மணலினும் பலர். அதனால்......