மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

நாற் பெருங் குழு
பாடல் வரிகள்:- 507 - 510
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் . . . .[507 - 510]
பழையன் மோகூ ரவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங் . . . .[510]
பொருளுரை:
நாற்பெருங் குழு - (அமைச்சர், புரோகிதர் என்னும் புரையோர், தூதன், ஒற்றன், படைத்தலைவன் ஆகியோரை அரசனின் ஐம்பெருங்குழு என்று நிகண்டு நூல் தொகுத்து உரைக்கிறது.) (அத்துடன் அரசனின் பெருஞ்சுற்றம் என்று ஐவரை நிகண்டு குறிப்பிடுகிறது. படைத்தொழிலாளர், நிமித்தம் பார்ப்பவர், ஆயுள் வேதியர், நட்பாளர், அந்தணர் என்னும் அறவோர் - என்போர் அந்த ஐவர்.) (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் - 6ம் என்று திருக்குறள் 381 தொகுத்துப் பார்க்கும்போது, அரணமைதியை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, படைத்தலைவர், குடிமக்களின் பிரதிநிதியாகக் கொள்ளத் தக்க ‘கிழார்’ போன்றோர். செல்வப் பெருமக்கள், அமைச்சர், நண்பர் - ஆகிய ஐவரை ஐம்பெருங்குழுஎன்று கொள்ள வேண்டியுள்ளது.) இந்த நூலில் பேசப்படுவது ‘நாற்பெருங் குழு’. இந்த நாற்பெருங்குழு எது? அந்தணர் (அடி 474) அறிஞர் (481). அறங்கூறும் அவைத்தலைவர் (492) - ஆகியோர் எனக் கொள்வது ஒருவகையில் பொருத்தமானது. இவ்வாறு கொள்வது கூறியது கூறலாக அமையும். என்றாலும் மோகூர் அரசவையில் நான்மொழிக் கோசர் வீற்றிருந்தது போல் மதுரை அரசவையில் நாற்பெருங்குழு இருந்தது என்று கூறப்படுவதால் , 4 மொழி பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர் எனல் மிகப் பொருத்தமானது. அக்காலத்தில் வழக்கில் இருந்த வடமொழி பாலி, தெலுங்கு, கன்னடம் - ஆகியவை அந்த 4 மொழிகள் என்க. இங்குக் குறிப்பிடப்படும் மோகூர் மதுரையின் ஒரு பகுதியாக உள்ளது.