மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

அமணப் பள்ளி
பாடல் வரிகள்:- 475 - 487
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க . . . .[480]
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமு
மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . . .[480]
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
பொருளுரை:
அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள். (அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.) அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள். தேன் நாவில் இனிப்பது போல் அவர்களின் தோற்றம் பார்வைக்கே இனிக்கும். சாவகர் என்போர் அந்த நோன்பிகளின் மாணாக்கர்கள். நோன்பிக்குத் தொண்டு செய்வோரும் சாவகர்களே. (சாவகர் என்பதால் இவர்களைச் சமணத் துறவியர் என்றும் கருதலாம்.) இந்தக் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கின்றனர். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து . . . .[485]
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் . . . .[475 - 487]
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து . . . .[485]
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
பொருளுரை:
அரண்மணையில் அரியணை இருக்கும் நாளவையின் பக்கச் சுவர்களில் கமண்டலம் போன்ற உருவ அமைப்புகள் இருந்தன. அவை கல்லை உளியால் பொளித்துச் செதுக்கிச் செய்யப்பட்டிருந்தன. சிமிலி என்னும் புரிசங்குச் சிப்பிகளில் கோவைகள் செய்யப்பட்டு நாலாப் பக்கமும் மறைக்கும் திரைகளாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பூத்துக் கிடக்கும் குளம் போல் மாளிகையின் அமைப்பு விளங்கிற்று. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது அருகிலிருந்து அண்ணாந்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே மேலே உயர்ந்திருந்த மாளிகை அது. அதில் பார்க்கப் பார்க்க வியப்பு உண்டாக்கும் பூங்கட்டில் (அரியணை) இடப்பட்டிருந்தது.