மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

நால் வகைப் படைகளின் இயக்கம்
பாடல் வரிகள்:- 375 - 395
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து . . . .[380]
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
யிருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து . . . .[380]
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையு
பொருளுரை:
கடலில் ஆடும் நாவாய் போலக் கட்டுத் தறியில் ஆடும் களிறுகள். பருத்த மீன்கள் வந்துபோகும் கடல். சங்குகள் மேயும் கடல். கப்பலில் பாய்மரம் கட்டிய கயிறு அறுந்து ‘இதை’ என்னும் பாய் காற்றில் பறக்கும் போது ,நாவாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலிலுள்ள கல்லில் மோதிச் சூறாவளிச் சுழலில் அகப்பட்டுச் சுழலும் நாவாய் போல, இருபுறமும் மணி ஆடி அடித்துக்கொண்டு செல்லும்போது கையில் அங்குசக் கோலைக் கொண்டிருக்கும் தன் பாகனைக் கொன்றுவிட்டு தன்மேல் அமர்ந்திருப்போரை வீசி எறிந்துவிட்டு, தன்னைப் பிணித்துள்ள சங்கிலித் தொடரைச் சற்றும் பேணாமல், கட்டியிருக்கும் தூணைச் சாய்த்துவிட்டு வெளியேறும் களிறு தெருவில் செல்லும். (போருக்கு இட்டுச் செல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் யானை இப்படிக் கட்டுக்காவல் மீறி வெளிப்பட்டுத் திரிந்தது.)
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் . . . .[385]
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்
தொண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதருஞ் . . . .[385]
செங்கா லன்னத்துச் சேவ லன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்குங் கவின்பெறு தேருங்
பொருளுரை:
ஞாயிற்றின் ஊறல்கண் கூசும்படி வெள்ளை நிறம் கொண்ட அன்னம். செங்கால் அன்னம். அது வானம் புதையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு விண்ணில்தாவிப் பறப்பது போல், செந்நிறக் குதிரைகள் இழுத்துச் செல்வதால் வெண்ணிறத் தேர்கள் பறந்தன. பறக்கும் திறன் குறைந்த அன்னம் பறப்பது போல் - இல்பொருள் உவமை
அடிபடு மண்டிலத் தாதி போகிய . . . .[390]
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
னடிபடு மண்டிலத் தாதி போகிய . . . .[390]
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
பொருளுரை:
குதிரை வீரர் சவுக்குக் கோலுடன் குதிரைமேல் அமர்ந்துகொண்டு தாக்கச் செல்லும் திசையைக் காட்டினர். முதுகில் சேணவளையல் அணிந்திருந்த அந்தக் குதிரைகள் அவன் காட்டிய வழியில் ‘ஆதி’ நடை போட்டுக்கொண்டு சென்றன.
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் . . . .[375 - 395]
கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு
மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
றீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர் . . . .[395]
பொருளுரை:
‘புழல்வல்சி’ என்பது குழாய்ப் புட்டு. வீரக்கழல் அணிந்த போர் மறவர்களுக்குப் புழல் வல்சி உணவு வழங்கப்பட்டது. (நினைவு கூர்க - பிட்டுக்கு மண் சுமந்த கதை) களமர் என்னும் சொல் உழவரைக் குறிக்கும். ‘கள்ளார் களமர்’ என்பது கள்ளுண்டு போர்க்கள உழவு செய்யும் வீரர்களைக் குறிக்கும். இருசார் படைகளும் கலந்து தாக்கிப் போரிட்டன. போரில் அவர்கள் நிகழ்த்திய செயல்கள் அரியனவும், பெரியனவுமாக அமைந்திருந்தன.