மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

பல் வகைக் கொடிகள்
பாடல் வரிகள்:- 360 - 374
மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன வியந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
பொருளுரை:
மதுரைத் தெருக்களில் மகிழ்ச்சியுடன் பாடி ஆடினர். அவர்களின் களிப்பு ஆரவாரம் கடலில் காற்றுஅடிக்கும்போது அலை எழுப்பும் ஆரவாரம் போல் இருந்தது. முரசு முழக்கும் ஓசை, குளம் வெட்டியது போல் வாயகன்ற இசைக்கருவிகளைத் தட்டுவதால் ஒலிக்கும் இசை, இவற்றைக் கேட்டு மகிழ்ந்து ஆடிப்பாடும் ஆரவாரம், ஆகியவை தெருக்களில் கேட்டுக்கொண்டேயிருந்தன.
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப . . . .[370]
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப் . . . .[360 - 374]
சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி
வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப் . . . .[370]
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்
பொருளுரை:
மதுரை நியமங்கள் வரையப்பட்ட ஓவியம் போல வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்தன. முருகனுக்குச் சேவல் கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி போன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம் அரசன் ஒவ்வொரு நாட்டையும் வெல்லும்போதெல்லாம் அந்த நாட்டின் அரசனைக் கொண்டுவந்து தங்கவைத்த மாடங்களில் பறக்க விடப்பட்ட அந்தந்த நாட்டுக் கொடிகள். நாள்தோறும் நடக்கும் விழாவுக்காக அன்றாடம் புதிது புதிதாக ஏற்றப்பட்ட கொடி. வென்ற நாட்டின் அடையாளமாக அங்கிருந்து கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்ட கொடிகள். கள் விற்குமிடம் இது என்று அடையாளம் காட்டும் கொடிகள். பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும் கொடிகள். இப்படி எங்கும் பறக்கும் கொடிகள் மலைமேல் ஆடும் அருவி போல் ஆடிப் பறந்தன.