மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்
பாடல் வரிகள்:- 197 - 209
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . . .[200]
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே . . . .[205]
பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ
டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . . .[200]
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி
யீத லுள்ளமொ டிசைவேட் குவையே . . . .[205]
பொருளுரை:
வானுலகத்தை அமிழ்தத்தோடு சேர்த்துக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான். பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன் முழங்கும் கடல் ஏணிக்கு மேல் உலகம் மலர்ந்து பூத்திருக்கிறது.உயர்ந்த மேல் உலகத்தின் வானோர் மண்ணுலகத்தையே படையாகத் திரட்டிக்கொண்டு எதிர்த்து வந்தாலும் செழியன் பணியமாட்டான். பழிக்கு அஞ்சுபவன் - பாண்டிய நாட்டின் தென்பகுதியில் வாணன் என்பவன் விழுமிய நிதிக்குவியலை மூங்கில் குழாய்களில் சேமித்து வைத்திருந்தான். அதனை முழுமையாகப் பெறுவதாயினும் ‘ஏற்றல்’ பழி வரும் என்று எண்ணி வாங்கமாட்டான். புகழ்வேள்வி செய்பவன் - தன்னிடம் உள்ள விழுமிய செல்வத்தை யெல்லாம் ‘ஈய வேண்டும்’ என்னும் எண்ணத்தோடு வாரி வழங்கும் இசை வேள்வியைச் செய்வான்.
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை . . . .[197 - 209]
கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளக்கு நல்லிசை
பொருளுரை:
செழியனை ‘அன்னாய்’ என விளித்துப் புலவர் சொல்லத் தொடங்குகிறார். எங்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவனே! உன் முன்னே நின்றுகொண்டு உன் பெருமைகளைப் பேசுவதால் என்ன பயன். சும்மா! ஒரு நினைப்பு. சொல்கிறேன் கேள். போரில் அப்பாவி மக்களை அழித்துவிட்டோமே என்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இந்தத் துன்பக் கவலையை விட்டு விடுக. தொலைவிடங்களும் போற்றும் நின் புகழ் குன்றாமல் நிலைத்திருக்கட்டும்.