பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 068

காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு


காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏமவாழ்க்கை

பாடல் : 068
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்,
கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர,
வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது . . . .[05]

உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,
கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், . . . .[10]

அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்-
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, . . . .[15]

நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்
செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல்,
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? . . . .[20]