பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 015

வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்


வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிரைய வெள்ளம்

பாடல் : 015
யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு-
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- . . . .[05]

கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், . . . .[10]

சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே: . . . .[15]

கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் . . . .[20]

வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின், . . . .[25]

மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, . . . .[30]

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்-
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது . . . .[35]

ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. . . . .[40]