பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 016

அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்


அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துயிலின் பாயல்

பாடல் : 016
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, . . . .[05]

ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:
ஆறிய கற்பின், அடங்கிய சாயல், . . . .[10]

ஊடினும் இனிய கூறும் இன் நகை,
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;
பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் . . . .[15]

வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும், கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே? . . . .[20]