பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 034

வென்றிச் சிறப்பு


வென்றிச் சிறப்பு

துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : ஒண்பொறிக் கழற்கால்

பாடல் : 034
ஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே!-
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடுங் கொடிய தேர் மிசையும், . . . .[05]

ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த .....
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, . . . .[10]

அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த!-நீ ஓம்பல் மாறே.