பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 041

வென்றிச் சிறப்பு


வென்றிச் சிறப்பு

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர்வீவேங்கை

பாடல் : 041
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;
பண் அமை முழவும், பதலையும், பிறவும்,
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,
காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் . . . .[05]

கை வல் இளையர் கடவுள் பழிச்ச;
மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்
பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்
மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, . . . .[10]

சேஎர் உற்ற செல்படை மறவர்,
தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,
வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் . . . .[15]

வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:
தாவல் உய்யுமோ மற்றே-தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், . . . .[20]

மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்
வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து
கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் . . . .[25]

கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,
படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே!