பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 012

வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்


வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மறம்வீங்கு பல்புகழ்

பாடல் : 012
வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல், பிற மான் . . . .[05]

தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது,
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்-
கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும்
காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; . . . .[10]

வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி-
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ, . . . .[15]

எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,
மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, . . . .[20]

நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;
வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள்,
வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய;
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! . . . .[25]