பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 066

வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்


வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல்சூழ் பறவை

பாடல் : 066
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, . . . .[05]

கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், . . . .[10]

நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, . . . .[15]

பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. . . . .[20]