பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பதிற்றுப்பத்து: 070
வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பறைக்குரல் அருவி
பாடல் : 070
களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து, . . . .[05]
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து,
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த . . . .[10]
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் . . . .[15]
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, . . . .[20]
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் . . . .[25]
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து, . . . .[05]
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து,
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த . . . .[10]
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் . . . .[15]
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, . . . .[20]
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் . . . .[25]
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!