பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 052

சிறுசெங்குவளை


சிறுசெங்குவளை

துறை : குரவைநிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சிறுசெங்குவளை

பாடல் : 052
கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிந் தாங்கு
மைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல் . . . .[05]

மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்து
முன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை . . . .[10]

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ . . . .[15]

நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல்அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அவை
ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக் . . . .[20]

கொல்புனல் தளின் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஓக்கிய *சிறுசெங் குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)
யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதை
கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ . . . .[25]

பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
அகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)
உருபுகிளர் வண்ணம் கொண்ட . . . .[30]

வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.