பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 043

மன்னனின் செல்வ மகிழ்ச்சி


மன்னனின் செல்வ மகிழ்ச்சி

துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏறாவேணி

பாடல் : 043
கவரி முச்சி, கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ . . . .[05]

கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த . . . .[10]

போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப,
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, . . . .[15]

கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறி, . . . .[20]

'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! . . . .[25]

மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,
கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக, மாவே!' என்றும்,
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், . . . .[30]

தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!-
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் . . . .[35]

வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.