பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து: 029

வென்றிச் சிறப்பு


வென்றிச் சிறப்பு

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண்கை மகளிர்

பாடல் : 029
அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந் தாள் நாரை இரிய; அயிரைக்
கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், . . . .[05]

வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,
அழியா விழவின், இழியாத் திவவின்,
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,
மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!- . . . .[10]

விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மாக் கண் கடிய கழற,
அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்
வரம்பு இல் தானை பரவா ஆங்கே. . . . .[15]