திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

குமரவேளின் பெருமை


குமரவேளின் பெருமை

6. பழமுதிர்ச் சோலை

முருகன் அருள்புரிதல்

பாடல் வரிகள்:- 287 - 295

தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, . . . .(290)

'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் . . . .(287 - 295)

பொருளுரை:

தெய்வத்து இளநலத்துடன் காட்சி தரும்படி வேண்டல் முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குபவன். இந்தத் தன்மையையெல்லாம் அவன் என்னிடம் வெளிப்படுத்த வேண்டும். அஞ்சாதே என்று சொல்லிப் பாதுகாக்க வேண்டும். நின் வரவை அறிவேன் என்று ஆறுதல் கூற வேண்டும். அன்பு மொழி கலந்து பேச வேண்டும். இருண்ட கடலால் சூழப்பட்ட உலகில் காத்தளிக்கும் கடவுளாக நீ மட்டுமே விளங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டும் பரிசில்.