திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
குமரவேளின் பெருமை
குமரவேளின் பெருமை

குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை
பாடல் வரிகள்:- 198 - 217
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .(200)
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு . . . .(205)
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
யிணைத்த கோதை யணைத்த கூந்தன் . . . .[200]
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
பொருளுரை:
வேலனுடன் சேர்ந்து மகளிரும் குரவை ஆடினர். அவர்கள் தம் கூந்தலை விரல்களால் கோதி உலர்த்திக் கொண்டனர். காட்டிலும் சுனையிலும் பூத்த பூமாலைக் கண்ணியைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். அணைத்துப் பின்னிய அவர்களின் கூந்தலானது பூங்கோதை இணைத்துப் பின்னப்பட்டிருந்தது. குல்லாத்தழை பூத்திருக்கும் வெண்கடம்பு, மரத்தளிர், மாந்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய தழையாடையை அவர்கள் தம் அல்குல் மறைய உடுத்தியிருந்தனர். வண்டு மொய்க்கும் நிலையில் அந்தத் தழையாடை புத்தம் புதிதாக இருந்தது. மயில் போன்ற அவர்களின் மடநடையோடு சேர்ந்து வேலன் குரவை ஆடினான்.
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .(210)
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி . . . .(215)
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று, . . . .(198 - 217)
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .[210]
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையி னியல வேந்தி . . . .[215]
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே, யதாஅன்று
பொருளுரை:
சிவந்த மேனி சிவந்த ஆடை செயலையந்தளிர் ஆடும்காது இடுப்பில் கச்சு காலில் கழல் தலையிலே வெட்சிப்பூக் கண்ணி குழைந்திருக்கும் தலைமயிர் கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைக் கொண்ட தோள் செம்மறியாட்டுக் கடாமீதும் மயில்மீதும் ஏறிய ஆட்டம் சேவல்கொடி உயர்ந்த உருவம் தொடி அணிந்த தோள் யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டு உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடை கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடை இப்படிப்பட்ட நிலையில் வேலனோடு சேர்ந்து கொண்டும் மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் குன்றிருக்கும் இடமெல்லாம் கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.