திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

குமரவேளின் பெருமை


குமரவேளின் பெருமை

4. திரு ஏரகம் (சுவாமிமலை)

அந்தணர் வழிபடும் முறை

பாடல் வரிகள்:- 183 - 189

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து . . . .(185)

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, . . . .(183 - 189)

பொருளுரை:

இருபிறப்பாளர் வழிபாடு இங்குச் சிறப்பு மிக்கது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன் பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அவர்கள் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக்கும் உணவு சமைப்பதே முத்தீ. பூணூலுக்குமுன் பூணூலுக்குப்பின் என்று அவர்களுக்கு இரண்டு பிறப்புக்கள் உண்டு. முப்புரிநூல் ஒன்பது கொண்டது அவர்களின் பூணூல். இவர்கள் நல்லநேரம் பார்ப்பவர்கள். ஈர ஆடையை உடுத்திக்கொண்டு புலரவிடுபவர்கள். உச்சியில் கைகளைக் கூப்பித் தாம் வழிவழியாகச் சொல்லக் கேட்ட ஆறெழுத்து மந்திரத்தைத் தாமும் சொல்லி முருகனைப் புகழ்ந்து வாய்விட்டுப் பாடுவர். மணம் மிக்க மலர்களைத் தூவிப் பூசை செய்வர். இதனை விரும்பி முருகன் ஏரகத்தில் வாழ்தலும் உண்டு. அதுவன்றி…