திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

குமரவேளின் பெருமை


குமரவேளின் பெருமை

3. திருவாவினன்குடி (பழநி)

திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்

பாடல் வரிகள்:- 148 - 159

கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . . .(150)

புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு

பொருளுரை:

பாம்புப் பல்லின் துளையில் நஞ்சு ஒடுங்கியிருக்கும். பாம்பு தீயைப் போல் பெருமூச்சு விடும். கண்டவுடன் மக்கள் அஞ்சி ஒதுங்கும் திறம் கொண்டது பாம்பு. இத்தகைய பாம்பை உணவுக்காகக் கொல்லும் திறம் படைத்ததாய்க் கழுத்தும் வயிறும் வெளுத்திருப்பது கருடப் பறவை. இதனைக் கொடியாகக் கொண்டவன் திருமால்.

வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

பொருளுரை:

வெள்ளைக் காளைமாட்டுக் கொடியை வெற்றிச் சின்னமாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவன் சிவபெருமான். பலரும் புகழும் அவனது வலிமை மிக்க தோள்களில் ஒன்றை அவன் மனைவி விரும்பிப் பெற்று விளையாடுகிறாள். அவன் மூன்று கண் கொண்டவன். விண்ணில் பறக்கும் மூன்று கோட்டைகளை அரசோடு அழித்தவன்.

நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் . . . .(155)

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், . . . .(148 - 159)

பொருளுரை:

இந்திரன் ஆயிரம் கண்ணை உடையவன். நூற்றூக் கணக்கான வேள்விகளில் வெற்றி கண்டு நான்கு தந்தம் கொண்ட யானையைப் பெற்று அதன்மீது ஏறி அழகொளி வீசிக்கொண்டு செல்பவன். அவனது யானையின் துதிக்கை மிகவும் நீளமாகத் தாழ்ந்திருக்கும்.