திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

குமரவேளின் பெருமை


குமரவேளின் பெருமை

6. பழமுதிர்ச் சோலை

முருகன் இருப்பிடங்கள்

பாடல் வரிகள்:- 218 - 226

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .(220)

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், . . . .(225)

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் . . . .(218 - 226)

பொருளுரை:

பழமையான முதிர்ந்த மலைசார் சோலைகள் தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்குஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா. ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சிதரும் நிலை வேலன் வெறியாட்டம் நிகழும் களங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்(கா) ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிருக்கும் துருத்தி நிலம் ஆறு குளம் வளைநிலம் ஊர்மேடை தெரு முட்டுமிடம் பூத்திருக்கும் கடம்ப மரத்தடி பொதுமக்கள் விளையாடும் மன்றம் பொதுமக்கள் கூடிப்பேசும் பொதியில் நிழலுக்காக அமைத்த தூண் மண்டபங்கள் ஆண்டலை என்னும் போர்ச்சேவல் கொடிநட்ட இடம் முதலான இடங்களில் முருகன் ஆண்டாண்டு ஆங்காங்கு குடிகொண்டிருப்பான்.