சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

நல்லியக்கோடனைக் காணுமுன் இருந்த வறுமை நிலை
பாடல் வரிகள்:- 129 - 140
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை, . . . .[130]
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும், புல்லென் அட்டில்
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை . . . .[130]
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டிற்
பொருளுரை:
இந்த நாளில் திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், தாயின் பால் சுரக்காத முலைகளிலிருந்து பால் பெறாததால், அதைப் பொறுக்க முடியாது அண்மையில் ஈன்ற தாய் நாய் குரைக்கும், புன்மையுடைய எங்கள் அடுக்களையில்.
சொற்பொருள்:
இந்நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை - இந்த நாளில் திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், கறவாப் பால் முலை கவர்தல் - பால் சுரக்காத முலைகளிலிருந்து நோனாது - பொறுக்க முடியாது, புனிற்று நாய் குரைக்கும் - அண்மையில் ஈன்ற நாய் குரைக்கும், புல்லென் அட்டில் - புன்மையுடைய எங்கள் அடுக்களை
பூழி பூத்த புழல் காளாம்பி,
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், . . . .[135]
வளைக் கை கிணைமகள், வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்,
அழி பசி வருத்தம் வீட………… . . . .[129 - 140]
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் . . . .[135]
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் . . . .[140]
பொருளுரை:
கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில் கூட்டமாகிய கரையான் அரித்த புழுதியில் உட்துளையுடைய காளான் பூத்த, வருந்துவதற்குக் காரணமான பசியால் ஒடுங்கிய மெலிந்த இடையையும், வளையல் அணிந்த கையையும் உடைய என் கிணைப் பறையை அடிக்கும் மனைவி, அவளுடைய பெரிய நகத்தினால் கிள்ளிக் கொணர்ந்த குப்பையில் வளரும் வேளைக்கீரையை உப்பு இல்லாமல் வேக வைத்து, பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கதவை அடைத்து விட்டுப் பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன் ஒன்றாக இணைந்து உண்ணும் நிலைமையையுடைய அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க,
குறிப்பு:
கிணைமகள் (136) - நச்சினார்க்கினியர் உரை - கிணைப் பறை கொட்டுவோனுடைய மனைவி, மகள். இரும்பேர் ஒக்கல் - பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 - நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை - புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 - மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 - கரிய பெரிய சுற்றத்தார்.
சொற்பொருள்:
காழ் சோர் முது சுவர் - கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில், கணச் சிதல் அரித்த பூழி - கூட்டமாகிய கரையான் அரித்த புழுதி, பூத்த புழல் காளாம்பி - உட்துளையுடைய காளான் பூத்த, ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் - வருந்துவதற்குக் காரணமான பசியால் ஒடுங்கிய மெலிந்த இடை, வளைக் கை கிணைமகள் - கையில் வளையல் அணிந்த கிணையை அடிக்கும் பெண், உகிர்க் குறைத்த குப்பை வேளை - பெரிய நகத்தினால் கிள்ளின குப்பையில் வளரும் வேளைக் கீரை, உப்பிலி வெந்த - உப்பு இல்லாமல் வெந்த, மடவோர் காட்சி நாணி - பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கடை அடைத்து - கதவை அடைத்து, இரும்பேர் ஒக்கலொடு - பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன், ஒருங்கு உடன் மிசையும் - ஒன்றாக இணைந்து உண்ணும், அழி பசி வருத்தம் வீட - அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க