சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
பாடல் வரிகள்:- 113 - 125
விரிகடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் . . . .[115]
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடை நோன்றா . . . .[115]
பொருளுரை:
கடையெழு வள்ளலால் மேற்கொண்ட ஈகையாகிய பாரத்தை, பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையுடைய முயற்சியை உடையவன்.
சொற்பொருள்:
எழுவர் பூண்ட ஈகை - ஏழு பேர் மேற்கொண்ட ஈகை, செந்நுகம் - பாரம், விரிகடல் வேலி வியலகம் விளங்க - பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் - ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையுடைய முயற்சியை உடையவன்
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும், . . . .[120]
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன்............ . . . .[113 - 125]
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும் . . . .[120]
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்அடி
பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன்.......... . . . .[125]
பொருளுரை:
நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகளை நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாகக் கொண்டு வந்து தரும், கரையை இடிக்கின்ற ஆற்றினையுடைய, தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன். ஓவியர் குடியில் பிறந்த பெருமான். களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய அசையும் வீரக் கழல்களை அணிந்த திருத்தமான அடிகளையும், பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகளையும் உடையவன். பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்.
குறிப்பு:
புறநானூறு 176 - பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை. தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய நல் மா இலங்கை (119) - இரா. இராகவையங்கார் உரை - கருப்பித்தபோதே (நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே) பழமையான பெருமையினையுடைய இலங்கையென்னும் பேரைப் பெற்றதுமான நன்றாகிய பெருமையையுடைய இலங்கை, நச்சினார்க்கினியர் உரை - கருப்பித்த முகூர்த்தத்திலே பழையதாகிய பெருமையையுடைய இலங்கையின் பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையுடைய இலங்கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - ராவணன் ஆண்ட வலி மிக்க பழைய இலங்கை என்றவாறு. புறநானூறு பாடல் 158 - இதில் கடையெழு வள்ளல்களைப் பற்றின குறிப்பு உள்ளது.
சொற்பொருள்:
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் - நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னையும் அகிலும் சந்தனமும், துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய - நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாக, பொரு புனல் தரூஉம் - கரையை இடிக்கின்ற நீர் கொண்டு வந்து தரும் (தரூஉம் - இன்னிசை அளபெடை), போக்கறு மரபின் - அழித்தற்கு அரிய மரபை உடைய, தொல் மா இலங்கை - தொன்மையான பெருமை மிக்க இலங்கை, கருவொடு பெயரிய - நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே, நல் மா இலங்கை - சிறந்த மாவிலங்கை, மன்னருள்ளும் - மன்னர்கள் பலருள்ளும், மறு இன்றி விளங்கிய - மறு இல்லாது விளங்கிய, வடு இல் வாய்வாள் - பழியில்லாத குறியைத் தப்பாத வாள், உறுபுலித் துப்பின் - புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடன், ஓவியர் பெருமகன் - ஓவியர் குடியில் பிறந்த பெருமான், களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி - களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய கழல் அணிந்த திருத்தமான அடிகள், பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை - பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகள், பல் இயம் கோடியர் புரவலன் - பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்