சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

சோழ நாட்டின் பெருமை
பாடல் வரிகள்:- 068 - 083
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில், . . . .[70]
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
யோவத் தன்ன யுண்டுறை மருங்கிற் . . . .[70]
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
பொருளுரை:
நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்த கரையில் நிற்கும் செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின் இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்களின், இந்திரகோபத்தைப் போன்று தோன்றும் மலர்த் தாது உதிர்ந்ததால், காண்பதற்கு ஓவியத்தைப் போன்று உள்ள குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில்,
குறிப்பு:
துணை ஆர் கோதை (69) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கடம்பின் பூ புனைந்த மாலை போறலின், துணை ஆர் கோதை என்றார். நச்சினார்க்கினியர் உரை - கோதை போல பூத்தலிற் கோதை என்றார்.
சொற்பொருள்:
நறு நீர்ப் பொய்கை அடைகரை - நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்து நிற்கும் கரை, நிவந்த துறு நீர்க் கடம்பின் - செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின், துணை ஆர் கோதை - இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்கள், ஓவத்து அன்ன - ஓவியத்தைப் போன்று (ஓவம், அத்து சாரியை), உண் துறை மருங்கில் - குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில், கோவத்து அன்ன - பட்டுப்பூச்சியைப் போன்று, இந்திர கோபம், மூதாய், தம்பலம் (கோவத்து - கோவம், அத்து சாரியை), கொங்கு சேர்பு உறைத்தலின் - மலர்த் தாது உதிர்ந்ததால்
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன,
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை, . . . .[75]
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை . . . .[75]
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
பொருளுரை:
எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல் உள்ள சிவந்த இதழ்கள் சூழ்ந்த, செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதியின் மீது, தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி, சிறகை அசைத்து விருப்பமுடைய ஆண் தும்பிகள் சீகாமரப் பண்ணை இசைக்கும்.
சொற்பொருள்:
வருமுலை அன்ன வண் முகை உடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை - எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன - குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல், சாதிலிங்கம், சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை - சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதி, ஏம இன் துணை தழீஇ - தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி (சொல்லிசை அளபெடை), இறகு உளர்ந்து காமரு தும்பி - சிறகை அசைத்து விருப்பமுடைய தும்பிகள் (காமரு - விகாரம்), காமரம் செப்பும் - சீகாமரப் பண்ணை இசைக்கும்
குணபுலம் காவலர் மருமான், ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் . . . .[80]
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று . . . .[68 - 83]
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந் . . . .[80]
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே, யதாஅன்று
பொருளுரை:
மருத நிலம் சூழ்ந்த நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலத்தின் மன்னர் குடியில் பிறந்தவன். இடி தன்னுடைய கழுத்தினால் உரசும் கதவையுடைய பகைவரின் உயர்ந்த தொங்கும் கோட்டையை அழித்தவன் சோழன். ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள் உடையவன். தான் தேடாது அடைந்த நல்ல புகழையுடையவன். நல்ல தேர்களையுடைய சோழனின் குடிமக்கள் நாட்டை விட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்ல,
குறிப்பு:
தூங்கு எயில் (81) - திரிபுர அசுரர்கள் தெய்வத்தன்மை உடைய மூன்று மதில்களை வரத்தால் பெற்று, அவற்றுள் பாதுகாப்போடு இருந்து கொண்டு, தாங்கள் நினைத்தவாறு பறந்து சென்று பல இடங்களைப் பாழ்படுத்தி, தேவர்களை வருத்தியதால், சிவபெருமான் அம்மதில்களை எரித்து அழித்தான்.
சொற்பொருள்:
தண் பணை தழீஇய தளரா இருக்கை குண புலம் - மருத நிலம் தழுவிய (சூழ்ந்த) நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலம், காவலர் மருமான் - மன்னர் குடியில் பிறந்தவன், ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் - ஓங்கி உயர்ந்த பகைவரின் கோட்டைக் கதவில் தன் கழுத்தினால் தாக்கும் இடி, தூங்கு எயில் எறிந்த - தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கு தடக்கை - ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள், நல்லிசை நாடா - தான் தேடாது அடைந்த நல்ல புகழ், நற்றேர்ச் செம்பியன் - நல்ல தேர்களையுடைய சோழன், ஓடாப் புட்கை - ஓடாமைக்குக் காரணமான வலிமை, உறந்தையும் - உறந்தையும், வறிதே - சிறிதே, அதாஅன்று - அது மட்டும் அல்ல (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, இசைநிறை அளபெடை)