சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

பாண்டிய நாட்டின் பெருமை
பாடல் வரிகள்:- 051 - 067
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத,
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த . . . .[55]
தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த . . . .[55]
பொருளுரை:
மலர்கள் தேனைச் சொட்டும் இளமை முதிர்ந்த நுணா மரத்தினது வெட்டின சிறிய மரக்கட்டைத் துண்டுகளில், இரும்பு உளியால் குடைந்து கையினால் செம்மையாகக் கடைந்து செய்த மாலையை மார்பில் அணிந்தும், நெட்டியால் செய்யப்பட்ட மாலையைச் செவி அடியில் சூடி, நோன் பகட்டு உமணர் வலிமையான காளைகளையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த,
குறிப்பு:
செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி (54) - நச்சினார்க்கினியர் உரை - கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியில் நெற்றி மாலையாகக் கட்டி. நறவுவாய் உறைக்கும் (51) - நச்சினார்க்கினியர் உரை - தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்றும் துளிக்கும்.
சொற்பொருள்:
நறவுவாய் உறைக்கும் - தேனை மலர்கள் சொட்டும் (நறவு - நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நாகு முதிர் - இளமை முதிர்ந்த, நுணவத்து - நுணா மரத்தின் (நுணவு என்றாகி அத்துச் சாரியை பெற்று நுணவத்து என நின்றது), அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத - வெட்டிய வாயையுடைய சிறிய மரத்துண்டுகளை உளியால் கடைந்து, கை புனை செப்பம் கடைந்த - கையினால் செம்மையாகக் கடைந்து செய்த, மார்பின் - மார்பில், செய் பூங் கண்ணி - நெட்டியால் செய்த மலர்க்கண்ணி, செவி முதல் திருத்தி - செவி அடியில் நெற்றி மாலையாகச் சூடி, நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த - வலிமையான எருத்தினையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்,
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற . . . .[60]
கிளர் பூண் புதல்வரொடு, கிலுகிலி ஆடும்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புறம் மறைக்கு நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற . . . .[60]
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
பொருளுரை:
பிள்ளைகளைப் போன்ற பெண் குரங்கு ஒன்று, மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த, செறிந்த அழகான முத்துக்களை உள்ளே அடக்கிய, வாளின் வாயைப் போன்ற வாயையுடைய கிளிஞ்சலை, நுண்ணிய இடையையும், பின்புறத்தை மறைக்கின்ற அசையும் ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தலையுமுடைய உப்பு வணிகரின் மனைவி பெற்ற, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன், கிலுகிலுப்பை ஆகக் கொண்டு விளையாடும்.
குறிப்பு:
நளி நீர் (57) - நச்சினார்க்கினியர் உரை- செறிந்த நீர்மையுடைய, உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 368 - செறிந்த நீர். முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 - முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 - இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 - முத்து ஏர் வெண் பல், கலித்தொகை 64 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏய்க்கும் வெண் பல், கலித்தொகை 131 - முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 - எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 - முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 - துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 - நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 - முத்து உறழ் முறுவல்.
சொற்பொருள்:
மகாஅர் அன்ன - பிள்ளைகளைப் போல (மகாஅர் - இசைநிறை அளபெடை), மந்தி - பெண் குரங்கு, மடவோர் நகாஅர் அன்ன - மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த (நகாஅர் - இசைநிறை அளபெடை), நளி நீர் முத்தம் - செறிந்த நீர்மையுடைய முத்து, செறிந்த நீரின் முத்து, செறிந்த அழகான, வாள் வாய் - வாளின் வாய், எருந்தின் - கிளிஞ்சலின், வயிற்றகத்து அடக்கி - உள்ளே அடக்கி, தோற்புறம் மறைக்கும் - பின்புறத்தை மறைக்கும், நல்கூர் நுசுப்பின் - நுண்ணிய இடையையுடைய, உளர் இயல் ஐம்பால் - அசைகின்ற ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தல், உமட்டியர் - உப்பு வணிகரின் மனைவி, ஈன்ற - பெற்ற, கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் - விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன் கிலுகிலுப்பை விளையாடும்
தென் புலம் காவலர் மருமான், ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன், . . . .[65]
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்,
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, அதாஅன்று . . . .[51 - 67]
றென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் . . . .[65]
றமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, யதாஅன்று
பொருளுரை:
நிறைந்த நீரை எல்லையாகவுடைய கொற்கையின் மன்னன், தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், பகைவரின் நிலங்களைக் கொண்டவன், முத்து மாலையை அணிந்தவன், வெண்குடை உடையவன், கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரத்தை அணிந்தவன், விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியனின் தமிழ் வீற்றிருந்த, பெறுதற்கு அரிய மரபையுடைய, மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையில் பெறும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்ல,
சொற்பொருள்:
தத்து நீர் வரைப்பு - நிறைந்த நீரை எல்லையாகவுடைய, கொற்கைக் கோமான் - கொற்கையின் மன்னன், தென் புலம் காவலர் மருமான் - தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், ஒன்னார் மண் மாறு கொண்ட - பகைவரின் நிலங்களைக் கொண்ட , மாலை - முத்து மாலை, வெண்குடை - வெண்குடை, கண்ணார் கண்ணி - கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரம், கடுந்தேர்ச் செழியன் - விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியன், தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் - தமிழ் வீற்றிருந்த பெறுதற்கு அரிய மரபையுடைய, மகிழ்நனை மறுகின் மதுரையும் - மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையும், வறிதே - சிறிதே, அதாஅன்று - அது மட்டும் அல்ல (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, இசைநிறை அளபெடை)