சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


சேர நாட்டின் வளமை

பாடல் வரிகள்:- 041 - 050

கொழுமீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை,
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு, பெயரா, . . . .[45]
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்

பொருளுரை:

கொழுத்த மீன் வெட்டப்படும்படி நடந்து, வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, பெரிய வாயையுடைய எருமை, மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவ, முற்றாத இளங்கள் மணக்கும்படி, மென்று அசையிட்டு, காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்.

குறிப்பு:

மெல்குபு பெயரா (45) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - மென்று அசையிட்டு. பெயரா - பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

கொழு மீன் குறைய ஒதுங்கி - கொழுத்த மீன் துணியும்படி நடந்து, வள் இதழ் கழுநீர் மேய்ந்த - வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, கய வாய் எருமை - பெரிய வாயையுடைய எருமை, பைங்கறி நிவந்த பலவின் நீழல் - மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழல், மஞ்சள் மெல் இலை மயிர்ப்புறம் தைவர - மஞ்சளின் மெல்லிய இலை மயிரையுடைய முதுகினைத் தடவ, விளையா இளங்கள் நாற - முற்றாத இளங்கள் மணக்கும்படி, மெல்குபு பெயரா - மென்று அசையிட்டு, குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் - காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்

குட புலம் காவலர் மருமான், ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த,
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்,
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, அதாஅன்று . . . .[41 - 50]

பொருளுரை:

மேற்குத் திசையைக் காக்கும் சேர மன்னரின் குடியில் பிறந்தவன், பகைவருடைய வடபுலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் சேரரின் சின்னமான வளைந்த வில்லினைப் பொறித்த, கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடைய, ஓடும் தேரையுடைய குட்டுவனின், பெருகி வரும் நீரினையும் வாயிலையுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்லாது,

குறிப்பு:

அதாஅன்று (50) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு. அது என்னும் சுட்டு வஞ்சியைச் சுட்டி நின்றது. குட்டுவன் (49) - நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - குட்ட நாட்டை உடையோன். வஞ்சி (50) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வஞ்சி என்பது சேரரின் தலை நகரம். திவாகரம் முதலிய நிகண்டுகளில் வஞ்சி என்பது கருவூர் எனக் கூறப்பட்டுள்ளது.

சொற்பொருள்:

குடபுலம் காவலர் மருமான் - மேற்குத் திசையைக் காக்கும் சேரர் குடியில் பிறந்தவன், ஒன்னார் வடபுலம் இமயத்து வாங்கு வில் பொறித்த - பகைவருடைய வட புலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் வளையும் வில்லினைப் பொறித்த, எழு உறழ் திணி தோள் - கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்கள், இயல் தேர்க் குட்டுவன் - ஓடும் தேரையுடைய குட்டுவன், புனையப்பட்ட தேரையுடைய குட்டுவன், வரு புனல் - பெருகி வரும் நீர், வாயில் - வாயில், வஞ்சியும் - வஞ்சி நகரமும் (வஞ்சி - இன்றைய கரூர்), வறிதே - சிறிதே, அதாஅன்று - அது மட்டும் அல்லாது (இசைநிறை அளபெடை)