சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

விறலியரின் அழகு
பாடல் வரிகள்:- 013 - 031
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன் . . . .[15]
மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின் அடி, தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என . . . .[20]
மால் வரை ஒழுகிய வாழை, வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன் . . . .[15]
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . . . .[20]
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதி
பொருளுரை:
மென்மையாக விழும், தாழ்வாகப் பெய்யும் மழை மேகத்தின் அழகுடன் இருந்த எண்ணெய்த் தடவிய கரிய கூந்தலையும், கூந்தலைப் போன்ற நீலமணியைப் போன்ற கண்ணினையுடைய தோகையைப் பரப்பி ஆடும் ஆண் மயில்கள் விறலியரின் அழகுக்கு ஒப்பாகத் தாம் இல்லையே என்று தங்கள் பெண் மயில்கள் பின் மறைக்கும் மென்மையையும், ஓடித் தளர்ந்த வருந்திய நாயின் நாக்கைப் போன்று நல்ல அழகு உடைய அணிகலன் இல்லாத பொலிவு இழந்த அடியினையும், தொடர்ந்து நிலத்தில் பொருந்திய கரிய பெண் யானையின் பெரிய தும்பிக்கையைப் போல் உடன் சேர்ந்த நெருங்கிய தொடைகளையும், தொடையைப் போலத் திரண்டு, உயர்ந்த மலையில் வளரும் அழிதல் இல்லாத வாழையின் பூவைப் போன்று பொலிந்த கூந்தல் முடிச்சும்,
குறிப்பு:
விறலியர் ஆடவும் பாடவும் வல்ல பெண்கள். பொருநராற்றுப்படை 40 - இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், பொருநராற்றுப்படை 42 - வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி. நற்றிணை 225 - வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன. நற்றிணை 252 - முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடி. ஒழுகிய வாழை (21) - நச்சினார்க்கினியர் உரை - ஒழுங்குபட வளர்ந்த வாழை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - இடையறவு படாது ஒன்றன் பின் ஒன்றாய்க் கிளைத்து வாழும் இயல்பினுடைய வாழை மரம். குறங்கு என (20) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - மகளிர் தொடையைப் போலத் திரண்ட வாழை, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - தொடையைப் போலத் திரண்ட வாழை, செறிந்த குறங்கின் குறங்கு (20) - நச்சினார்க்கினியர் உரை - ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும்.
சொற்பொருள்:
ஐது வீழ் இகு பெயல் - மென்மையாக விழும் தாழப் பெய்யும் மழை, அழகு கொண்டு அருளி - எழிலுடன் அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின் - எண்ணெய்த் தடவிய கரிய கூந்தலையும், கதுப்பு என - கூந்தலைப் போன்ற, மணி வயின் கலாபம் பரப்பி - நீலமணியைப் போன்ற கண்ணினையுடைய தோகையைப் பரப்பி, பலவுடன் - மயில் மயில் குளிக்கும் - பல மயில்கள் மறைக்கும், சாயல் - மென்மை, சாஅய் உயங்கு நாய் - ஓடித் தளர்ந்த வருந்திய நாய், நாவின் - நாக்கைப் போன்று, நல் எழில் - நல்ல அழகு, அசைஇ - வருத்தி, வயங்கு இழை - ஒளியுடைய அணிகலன்கள், உலறிய - பொலிவு இழந்த, அடியின் - அடியினையும், தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் - தொடர்ந்து நிலத்தில் பொருந்திய, இரும் பிடி - பெரிய பெண் யானை, கரிய பெண் யானை, தடக் கையின் - பெரிய தும்பிக்கையைப் போல், சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் - உடன் சேர்ந்த நெருங்கிய தொடையைப் போல, குறங்கு என - தொடையைப் போல் திரண்டு, மால் வரை - உயர்ந்த மலை, ஒழுகிய - ஒழுங்கான, வாழை (வாழ் ஐ) - அழிதல் இல்லாத வாழ்தலையுடைய, வாழைப்பூ என - வாழைப் பூவைப் போன்று, பொலிந்த ஓதி - பொலிந்த கூந்தல் முடிச்சும்
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் . . . .[25]
பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின், எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின், மெல் இயல், . . . .[30]
மட மான் நோக்கின், வாணுதல் விறலியர் . . . .[13 - 31]
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் . . . .[25]
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியன். . . .[30]
மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
பொருளுரை:
அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, அதன் தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும் மஞ்சள் தேமலையும், மஞ்சள் தேமல் சிதறினாற்போல் புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரத்தின் விளங்குகின்ற மொட்டுக்களை எள்ளி நகையாடும் அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீரைப் போன்று ஊறலுடைய பற்களையும், பற்களைப் போன்ற கஞ்சங் குல்லையுடைய அழகிய காட்டின்கண்ணே குவிந்த அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையையும், மான் போன்ற நோக்கையும், ஒளியுடைய நெற்றியையும் உடைய, ஆடலிலும் பாடலிலும் சிறந்த விறலியரின்
குறிப்பு:
அகநானூறு 274 - முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 - முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 - முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 - முல்லை சான்ற கற்பின், சிறுபாணாற்றுப்படை 169 - முல்லை சான்ற. அகநானூறு 240 - கோங்கு முகைத்தன்ன குவி முலை.
சொற்பொருள்:
நளிச் சினை வேங்கை - அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரம், நாள் மலர் நச்சி - அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, களி சுரும்பு அரற்றும் - தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும், சுணங்கின் - மஞ்சள் தேமலையும், சுணங்கு - மஞ்சள் தேமல், பிதிர்ந்து - சிதறி, யாணர் கோங்கின் - புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரம், அவிர் முகை - விளங்குகின்ற மொட்டுக்கள், எள்ளி - எள்ளி, பூண் அகத்து ஒடுங்கிய - அணிகலன் கிடக்கின்ற, வெம்முலை - விருப்பம் தருகின்ற முலை, முலை என - முலையைப் போன்று, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு - பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீர், இகுதரும் - வடிகின்ற, எயிற்றின் - தரும் பற்களையும், எயிறு என - பற்களைப் போன்று, குல்லை - கஞ்சங் குல்லை, அம் புறவில் - அழகிய காட்டில், குவி முகை - குவிந்த மொட்டுக்கள், அவிழ்ந்த - மலர்ந்த, முல்லை சான்ற கற்பின் - முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையும், மட மான் நோக்கின் - மான் போன்ற நோக்கினுடைய, வாள் நுதல் - ஒளியுடைய நெற்றி, விறலியர் - ஆடலிலும் பாடலிலும் சிறந்த விறலியர்