சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

நிலமகளின் தோற்றம்
பாடல் வரிகள்:- 001 - 006
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று.
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான் யாற்றுக்
பொருளுரை:
மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய மார்பில், அசையும் முத்து மாலையைப் போல அசைந்து, மலையை வருத்தி ஓடுகின்றது தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறு.
குறிப்பு:
நச்சினார்க்கினியர் உரை - இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று. இது மெய்யுவமம். பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார்.
சொற்பொருள்:
மணி மலை - நீலமணியையுடைய மலைகள், பணைத்தோள் - மூங்கிலாகிய தோள்களையுடைய, மாநில - பெரிய நிலம், மடந்தை - இளம் பெண், அணி முலை - அழகிய மார்பு, துயல்வரூஉம் ஆரம் போல - அசையும் முத்து மாலையைப் போல, செல் புனல் உழந்த - ஓடும் நீராலே வருந்திய, சேய்வரல் கான் யாற்று - தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறு
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, . . . .[5]
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் . . . .[1 - 6]
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் . . . .[05]
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
பொருளுரை:
ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரையில் உள்ள நறுமணமுடைய சோலையில் உள்ள குயில்கள் தங்கள் அலகினால் குத்திக் கீழே உதிர்த்த புதிய வாடல் மலர்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்திருப்பது போல இருந்தது கருமையான நுண்ணிய மணல்.
குறிப்பு:
கூந்தலைப் போன்ற மணல் - ஐங்குறுநூறு 345 - கதுப்பு அறல், கலித்தொகை 32 - எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 - கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.
சொற்பொருள்:
கொல் கரை - ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரை, நறும் பொழில் - நறுமணமுடைய சோலை, குயில் குடைந்து உதிர்த்த புதுப்பூ - குயில் குத்தி உதிர்த்த புதிய மலர்கள், செம்மல் சூடி - வாடல் மலர்களைச் சூடி, புடை நெறித்து - பக்கங்கள் நெளிந்து, பக்கங்கள் சுருண்டு, கதுப்பு விரித்து அன்ன - கூந்தல் விரிந்திருப்பது போல, காழ் அக நுணங்கு அறல் - கருமையான நுண்ணிய மணல்