பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்: 18

செவ்வேள்


பாடியவர் : குன்றம்பூதனார்
இசையமைத்தவர் : நல்லச்சுதனார்
பண் : காந்தாரம்

செவ்வேள்

கடவுள் வாழ்த்து

இமயத்தொடு நிகர்க்கும் குன்று

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, . . . .[05]

ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.

தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
'உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, அவன், . . . .[10]

'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.

பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று

ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், . . . .[15]

மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
கை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி --
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம் . . . .[20]

பூத்தன -- பாணா! நின் பாட்டு.

பரங்குன்றத்திலுள்ள அம்பலம்

தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
இருள் போழும் கொடி மின்னால் -- . . . .[25]

வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு! -- நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.

குன்றத்துக் காட்சிகள்

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி -- . . . .[30]

சூர் ததும்பும் வரைய காவால்,
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
ஏர் ததும்புவன பூ அணி செறிவு,
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ -- கார் தோற்றும்
காந்தள், செறிந்த கவின், . . . .[35]

கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக்கால் ஆர்த்து -- அணி மழை -- கோலின்றே,
வச்சிரத்தான் வானவில்லு.

குன்றத்தின் சிறப்பு

வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின -- . . . .[40]

வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய -- நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல்,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன -- குன்றம். . . . .[45]

அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
கூனி வளைத்த -- சுனை, . . . .[50]

முருகவேளை வாழ்த்துதல்

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு, . . . .[55]

பிரியாது இருக்க -- எம் சுற்றமோடு உடனே!