பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்: 17
செவ்வேள்
பாடியவர் : நல்வழிசியார்
இசையமைத்தவர் : நல்லச்சுதனார்
பண் : நோதிறம்
செவ்வேள்
கடவுள் வாழ்த்து
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து -- . . . .[05]
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ --
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?

மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்
ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, . . . .[10]
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, . . . .[15]
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
மாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல் -- . . . .[20]
மாறு அட்டான் குன்றம் -- உடைத்து.

பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; . . . .[25]
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை . . . .[30]
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.

பரங்குன்றின் அலங்காரம்
வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார், . . . .[35]
ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;
அனைய, பரங்குன்றின் அணி.
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார், . . . .[35]
ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;
அனைய, பரங்குன்றின் அணி.
தெய்வ விழவும் விருந்தயர்வும்
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ; . . . .[40]
மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;
தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும், . . . .[45]
கை ஊழ் தடுமாற்றம் நன்று.

முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, . . . .[50]
அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் --
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, . . . .[50]
அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் --
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.