அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 329
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - தலைமகள் கூற்று
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் . . . . [05]
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை . . . . [10]
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் . . . . [05]
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை . . . . [10]
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?
- உறையூர் முதுகூத்தனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகலியைந்து உமணர் . . . . [05]
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து
எறிவளி சுழற்றும் அத்தம் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே பாய்கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை . . . . [10]
நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன்மலை இறந்தே
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகலியைந்து உமணர் . . . . [05]
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து
எறிவளி சுழற்றும் அத்தம் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே பாய்கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை . . . . [10]
நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன்மலை இறந்தே