அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 220

மணிமிடைபவளம்


மணிமிடைபவளம்

நெய்தல் - தோழி கூற்று

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் . . . . [05]

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே . . . . [10]

நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், . . . . [15]

இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் . . . . [20]

நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே.
- மதுரை மருதன் இளநாகனார்.