அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 350
நித்திலக் கோவை
நித்திலக் கோவை
நெய்தல் - தோழி கூற்று
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; . . . . [05]
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, . . . . [10]
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! . . . . [15]
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; . . . . [05]
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, . . . . [10]
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! . . . . [15]
- சேந்தன் கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கழியே சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; . . . . [05]
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ - பெருநீர்ச் சேர்ப்ப!
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி . . . . [10]
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே! . . . . [15]
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; . . . . [05]
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ - பெருநீர்ச் சேர்ப்ப!
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி . . . . [10]
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே! . . . . [15]