அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 260
மணிமிடைபவளம்
மணிமிடைபவளம்
நெய்தல் - தலைமகள் கூற்று
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் சொல்லியது.
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, . . . . [05]
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, . . . . [10]
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே . . . . [15]
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, . . . . [05]
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, . . . . [10]
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே . . . . [15]
- மோசிக் கரையனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மண்டிலம் மழுக மலைநிறம் கிளர,
வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச், . . . . [05]
செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி எல்உற, . . . . [10]
யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது,
முதுமரத்து உறையும், முரவுவாய் முதுபுள்
கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள்,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த
அன்பி லாளன் அறிவுநயந் தேனே . . . . [15]
வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச், . . . . [05]
செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி எல்உற, . . . . [10]
யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது,
முதுமரத்து உறையும், முரவுவாய் முதுபுள்
கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள்,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த
அன்பி லாளன் அறிவுநயந் தேனே . . . . [15]