அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 218

மணிமிடைபவளம்


மணிமிடைபவளம்

குறிஞ்சி - தோழி கூற்று

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது.

"கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, . . . . [05]

புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
படாஅவாகும், எம் கண்" என, நீயும்,
"இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, . . . . [10]

வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது" என்னாய்,
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் . . . . [15]

அடைய முயங்கேம்ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, . . . . [20]

ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!
- கபிலர்.