அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 090
களிற்றியானை நிரை
களிற்றியானை நிரை
நெய்தல் - தோழி கூற்று
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது.
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் . . . . [05]
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர் . . . . [10]
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே!
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் . . . . [05]
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர் . . . . [10]
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே!
- மதுரை மருதன் இளநாகனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள் . . . . [05]
வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர் . . . . [10]
இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிலை விலையே!
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள் . . . . [05]
வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர் . . . . [10]
இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிலை விலையே!