அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 064

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

முல்லை - தலைவன் கூற்று

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் . . . . [05]

வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந் நில மருங்கின்,
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி . . . . [10]

மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை . . . . [15]

புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே
- ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்.