அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 055
களிற்றியானை நிரை
களிற்றியானை நிரை
பாலை - தாய் கூற்று
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது.
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் . . . . [05]
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் . . . . [10]
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வான் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் . . . . [15]
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் . . . . [05]
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் . . . . [10]
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வான் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் . . . . [15]
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
- மாமூலனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி கானம்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் . . . . [05]
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் . . . . [10]
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண் . . . . [15]
காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே!
ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி கானம்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் . . . . [05]
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் . . . . [10]
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண் . . . . [15]
காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே!