அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 038

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

குறிஞ்சி - தோழி கூற்று

தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்; தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன் . . . . [05]

வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் . . . . [10]

கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு . . . . [15]

'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர்' என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே
- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.