எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.

பதினெண் கீழ்க்கணக்கு

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.

பதினெண் கீழ்கணக்கு

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.

வெண்பா

பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. அற நூல்கள்:
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
திரிகடுகம்
ஆச்சாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக் காஞ்சி
பழமொழி நானூறு
ஏலாதி
திருக்குறள் ஆகிய பதினொரு நூல்களும்,

2. அகப்பொருள் பற்றிய நூல்கள்:
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை ஆகிய ஆறு நூல்களும்,

3. புறப்பொருள் பற்றிய நூல்:
களவழி நாற்பது ஆகிய ஒன்றும் அடங்கும்.

மேலும் இன்னிலை என்ற நூல் கூட இப்பிரிவினைச் சார்ந்ததாக சிலர் கருதுகின்றனர்.