சங்கத்தமிழ் கவிதைகளைத் தேடியபொழுது பாட்டிலக்கணமுறைப்படி ஓசையொழுங்குடன் கூடிய மூலக் கவிதையினையும், பின்பு சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து எளிதாகப் பொருள்புரியும் வண்ணம் அவ்வரிகளைப் பிரித்த கவிதையினையும், கவிதைக்கான உரைகளையும் ஒரே இணையதளத்தில் இந்த இணைய வெளியிலே என்னால் பார்க்கமுடியவில்லை. அதை நிவர்த்திசெய்ய தன்னார்வம் கொண்டதன் விளைவே இந்த தளம்.

இந்த இணையத்தளம் முழுக்க முழுக்க சங்கத்தமிழ் சார்ந்த பதிவுகளையும், கவிதைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இணையவெளியில் சங்கத்தமிழுக்கென்று ஒரு தனித்துவம் வாய்ந்த தளமாக மிக மிகச் சொற்ப அளவிலான தளங்களே வலம்வந்துகொண்டு இருக்கின்றன அவைகளுக்கு வலுச்சேர்க்கும் தளமாக இதை மெருகேற்றிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதே எங்களது கனவு...

தளம் தொடர்பான புகார்கள், அறிவுரைகள் மற்றும் தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

தொடர்புப் படிவம்