நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 398

நெய்தல்


முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே . . . . [05]

பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன்,
சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே - நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே . . . . [10]
- உலோச்சனார்.

பொருளுரை:

அச்சஞ் செய்கின்ற அணங்கும் மறைத்துறையாதபடி இயங்கா நிற்கும்; விரிந்த கதிர்களையுடைய ஆதித்த மண்டிலமும் மேலைத்திசையிலே சென்று மறையாநிற்கும்; ஓரையாடிய மகளிர் தாமும் நீர் அலைத்தலாலே கலைந்த கூந்தலைப் பிழிந்து வடித்துத் துவட்சியுற்று அழகிய வயிற்றில் அறைந்துகொண்டு ஒருசேரக்கூடித் தம்மூர் புகுவாராயினர்; அன்னதொரு பொழுதில் யாம் பலவாய மலர்களையுடைய நறிய சோலையிடத்தே நின் காதலியைப் பாராட்டிச் 'சேயிழாய்! யாம் முன்னே செல்லா நிற்போம் வாராய்!' என்று கூறினேமாக; அங்ஙனம் கூறுதலும் மெல்லிய சாயலையுடைய அவள்; தன் நல்ல மார்பின்கண்ணே காணுந்தோறும் புதியனவாகத் தோன்றுகின்ற இளைய கொங்கைமுகடு நனையும்படி; மாட்சிமைப்பட்ட குளிர்ந்த கண்கள் தெளிந்த நீர்கொண்டு வடியாநிற்ப; யாம் கூறியதற்கு எதிர்; சிலவாய மொழியுங் கூறினாளில்லை ஆதலின்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயாக!