நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 389
குறிஞ்சி
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென . . . . [05]
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு . . . . [10]
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.
பொருளுரை:
எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தெளிவடைந்தன; தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்!