நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 309
குறிஞ்சி
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி! - தோழி! - 'வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் . . . . [05]
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி! - தோழி! - 'வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் . . . . [05]
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.
- கபிலர்.
பொருளுரை:
தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; 'என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது' என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்! நெடுங்காலம் வாழ்வாயாக! வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌ¤ந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்!