நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 296

பாலை


தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

என் ஆவதுகொல்? தோழி!- மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும், . . . . [05]

பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப, காதலர்:
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
- குதிரைத் தறியனார்.

பொருளுரை:

தோழீ! அரசருடைய போர்த்தொழில்வல்ல யானையின் புள்ளியையுடைய முகத்திலணிந்த பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தில் அலங்கரித்த அழகிய தோற்றம்போல; உள்ளே புழலமைந்த காயையுடைய சரக்கொன்றையின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துகள் பெரிய மலையின் மிகவுயர்ந்த இடத்தில் மேம்பட மலராநிற்கும்; பிரிந்தோர் வருந்துகின்ற பெறுதற்கரிய கார்காலத்திலும்; தாம் செய்ய வேண்டிய காரியத்தையே கருதிய வுள்ளத்துடனே நங் காதலர் விரைந்து செல்வாராயினர்; அங்ஙனம் செல்லுகின்றவருடன் சேரவுஞ் செல்லாமல் நாம் வருந்துகின்ற துன்பத்திலுழன்று இங்கேயே தங்கியிருக்கக் கடவேமாயினோம்; இஃதென்ன கொடுமை? இவ்வண்ணம் பிரிதலால்; இனி யாதாய் முடியுமோ? ஒன்று சூழ்ந்து கூறாய்.