நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 291

நெய்தல்


வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லியது.

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், . . . . [05]

கண்டாங்கு உரையாய்; கொண்மோ - பாண!
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?
- கபிலர்.

பொருளுரை:

பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி பரியேறிச் சென்று; இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குவிந்த வெளிய மணல் மேட்டில் ஏறியிருந்து; அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்ணிய பெரிய கடனீர்த்துறையை உடைய காதலனுக்கு; உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!