நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 290

மருதம்


பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! . . . . [05]

நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.
- மதுரை மருதன் இளநாகனார்.

பொருளுரை:

முட்போன்ற கூரிய பற்களையுடையோய்! வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; உழுது விட்ட ஓய்ந்த நடையையுடைய பகடு தின்னா நிற்கும் ஊரனுடன்; கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் 'அவள் அவனோடு கட்டில் வரை யெய்தினாள்' என்று ஊரார் கூறுகின்ற சொல்லைக்கொண்டு என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே. இனி என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாயின் யான் கூறுகின்றதனைக் கொள்வாயாக! அதுதான் யாதோவெனில் பெரிய இளைமையும் தகுதிப்பாடும் உடையையாதலால் நீ வேறுபட்டுக் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதது காண்; அவனை நெடிய நீரையுடைய பொய்கையில் நடுயாமத்திலே தண்ணிதாய் நறுமணங் கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டு எனச் சொல்லுவனரல்லாமல்; நல்ல ஆண்மகன் என யாருங்கூறார்; ஆதலின் அவனைப் புலவாதே கொள்!